வாடகைக்கு ஒரு சிறந்த அலுவலகம் கிடைப்பது உங்கள் வணிகத்தை வளர்க்க ஒரு சிறந்த வழியாகும். உங்கள் அலுவலக இடத்தை வாங்குவதை விட வாடகைக்கு எடுக்கும் போது உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய இடத்துக்கு இலகுவாக மாறக்கூடிய வசதி உங்களுக்கு உண்டு. தற்போது இலங்கையில் அலுவலக இடங்களுக்கான தேவைப்பாடு காணப்படுகின்றது. அதனால் உங்கள் இடத்தை வாடகைக்கு கொடுத்து நல்ல வருமானம் ஈட்டலாம். இலங்கையில் வணிக நடவடிக்கைகளை நடத்துவதற்கும் வாடிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவதற்கும் தளபாடங்களுடன் வசதிகள் செய்யப்பட்ட அலுவலக இடங்கள் வாடகைக்கு தேவைப்படுகின்றது.
இலங்கையில் வாடகைக்கு முழுமைப்படுத்தப்பட்ட அலுவலக இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
மின்வெட்டு உற்பத்தித்திறனைக் குறைப்பதால், solar power அல்லது ஜெனரேட்டர் உள்ள இடத்தை வாடகைக்கு எடுப்பது நல்லது. இதற்க்கு வாடகை கட்டணம் அதிகமாக இருந்தாலும் வணிகத்துக்கு பயனளிக்கக் கூடியது. நீங்கள் ஒரு சொகுசு அலுவலக இடத்தை வாடகைக்குத் தேர்வு செய்ய விரும்பலாம். உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதை முடிவு செய்யலாம். மேலும் வாகனம் நிறுத்தும் இடம், மேலதிக வசதிகள், Air Condition, CCTV வசதி, board room, internet உள்ள அலுவலக இதத்தை வாடகைக்கு எடுப்பது நல்லது.
நகர்புறப் பகுதியில் குத்தகைக்கு சிறந்த அலுவலக இடத்தைக் கண்டறிதல்
இது உங்கள் அலுவலக தேவையை பொறுத்து மாறுபடும். ஒரு வணிகத்திற்கு, அலுவலகத்தின் அளவு முக்கியமானது. 2000 சதுர அடி அலுவலக இடம் வாடகைக்கு வேண்டுமா? முழு அலுவலகத் தளமும் வாடகைக்கு வேண்டுமா? வாடகைக்கு சரியான அலுவலக இடத்தை கண்டறிய, அதன் இருப்பிடம் மற்றும் அது என்ன உணர்வை கொடுக்கிறது என அறிவது முக்கியமாகும். ikman இல் கொழும்பில், நீர்கொழும்பில், கண்டியில், காலியில், யாழ்ப்பாணத்தில் வாடகைக்குக் அலுவலக இடங்களைக் கண்டறியலாம். உயர்தரப் புகைப்படங்கள் நீங்கள் வாடகைக்கு எடுக்கக்கூடிய பல்வேறு அலுவலக இடங்களை விபரிக்கும். நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் விளம்பரங்களை shortlist செய்து, இருப்பிடத்தைப் பார்வையிட்டு, சுற்றுச்சூழலை பற்றி கவனியுங்கள்.