பஞ்சகவ்வியம் நுண்ணுயிர் பசளை
🌍புதிதாக தயாரிக்கப்பட்ட(13/11/2025) பஞ்சகவ்வியம் (சேதன திரவ நுண்ணுயிர் உரம்) விற்பனைக்கு. இது முற்றிலும் இயற்கையான உடனடி மாற்றத்தை காட்டக்கூடிய மனிதர்களுக்கும், சுற்றுசூழலுக்கு எந்த விதத்திலும் கெடுதல் தராத திரவ நுண்ணுயிர் நைதரசன் பசளை ஆகும்.
🌿 பஞ்சகவ்வியத்தால் தாவரங்கள் மீது ஏற்படும் விளைவுகள்
-இதில் உள்ள ஆக்சின்கள், கிப்பரெலின்கள் மற்றும் சைட்டோகினின்கள் தாவர வளர்ச்சி, வேர் நீட்சி, இலை விரிவாக்கம் மற்றும் பூக்கள் பூப்பதை ஊக்குவிக்கும்.
-தாவர நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் வறட்சி மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு எதிரான தாங்குதிறனை மேம்படுத்துகிறது.
-பஞ்சகவ்யாவுடன் விதை நேர்த்தி செய்வது விதையின் வீரியத்தையும், முளைப்பு திறனையும் அதிகரிக்கிறது.
-தீங்கு செய்யும் பூச்சி, நுண்ணுயிர்களுக்கு குறிப்பிட்டளவு எதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது.
🍎 பஞ்சகவ்வியத்தால் பழங்கள், காய்கறிகள் மீது ஏற்படும் நன்மைகள்
-தொடர்ந்து இலைவழி தெளிப்பதன் மூலம் பழங்கள், காய்கறிகளின் விளைச்சல் மற்றும் பருமன் அதிகரிக்கும்.
-பழங்கள், காய்கறிகளின் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்துகின்றன.
-பழங்கள், காய்கறிகள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
-பழங்கள், காய்கறிகளின் விட்டமின் சி, நுண்ணூட்டச்சத்து, ஊட்டச்சத்து அதிகரிக்கும்.
🌱 பஞ்சகவ்வியத்தால் மண்ணில் ஏற்படும் விளைவுகள்
-மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களான லாக்டிக் அமில பாக்டீரியா, ஈஸ்ட்கள் மற்றும் ஆக்டினோமைசீட்களை பெருக செய்யும்.
-மண்ணில் அகத்துறிஞ்சமுடியாதுள்ள நைட்ரஜன், பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தை எடுத்து பயிரிற்கு வழங்கும்.
-மண்ணின் ஊடுபுகும் தன்மை, கட்டமைப்பை, நீர் தக்கவைப்பு மற்றும் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது.
-நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் தீங்கு விளைவிக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவுடன் போட்டியிடுகின்றன, நோய்கள் ஏற்படும் சத்தியத்தை குறைக்கின்றன.
❓பயன்படுத்தும் முறை
🚿🍃இலைவழி தெளித்தல்: 30ml பஞ்சகவ்வியத்தை 1 லீட்டர் நீரில் கலந்து பயிரின் மேல் மாதம் 2/3 தடவை தெளிப்பதால் பயிரில் ஒளித்தொகுப்பு மேம்படுத்தப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும், பூக்களும் காய்களும் சரியான முறையிலும் ஆரோக்கியமாகவும் வளரும்.
🚿🍃Foliar Spray: Diluting 30ml Panchagavya in 1liter of water and spraying directly on leaves every 10–15 days during vegetative and flowering stages enhances photosynthesis, boosts immunity, and improves flowering and fruit set.
🚰🪴வேர்வழி ஊற்றல்: 30ml பஞ்சகவ்வியத்தை 1 லீட்டர் நீரில் கலந்து பயிரின் வேரில் மாதம் 1 தடவை ஊற்றுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும், பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும், சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் அளவு மேம்படுத்தப்படும்.
🚰🪴Soil Drench: Diluting 30ml Panchagavya in 1liter of water and applying around the root zone during irrigation once a month or at key growth stages Improves microbial activity, root development, and nutrient uptake.
🪣🥑விதை நேர்த்தி செய்தல்: 30ml பஞ்சகவ்வியத்தை 1 லீட்டர் நீரில் கலந்து விதைகளை 20 நிமிடம் ஊறவைத்து விதைப்பதால் முளைதிறன் அதிகரிக்கும், பயிர் வேகமாக வளரும்.
🪣🥑Seed Treatment: Diluting 30ml Panchagavya in 1liter of water and soaking seeds for 20 minutes before sowing enhances germination rate and seedling vigor.
🪣🌱நாற்று நடவு செய்தல்: 30ml பஞ்சகவ்வியத்தை 1 லீட்டர் நீரில் கலந்து நாற்றுக்களை 30 நிமிடம் ஊறவைத்து நடும்போது பிடுங்கி நடும் அதிர்ச்சி குறையும், வேர் வேகமாக நிலைநாட்ட உதவி புரியும்.
🪣🌱Root Dip (for Transplants): Diluting 30ml Panchagavya in 1liter of water and dipping roots for 30 minutes before planting reduces transplant shock and promotes early root establishment.
🪙Price விலை 1 லீட்டர்: 950 LKR
💰5 liter 5 லீட்டர்: 4400 LKR
Expiry காலாவதி
📅Best for 6 months
📅6 மாதங்கள் வைத்திருக்கலாம்
📍Location: Urelu, Jaffna
📍இடம்: ஊரெழு, யாழ்ப்பாணம்
- ikman support ஒருபோதும் chat செய்தி அனுப்பாது. இணைப்புகள், OTP, கார்டு விவரங்கள் பகிர வேண்டாம். பொருள் பார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். ikman இல் டெலிவரி சேவை இல்லை.
- ikman support ஒருபோதும் chat செய்தி அனுப்பாது. இணைப்புகள், OTP, கார்டு விவரங்கள் பகிர வேண்டாம். பொருள் பார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். ikman இல் டெலிவரி சேவை இல்லை.